Reading Time: < 1 minute

கனடாவின் டொரன்டோ பெரும்பாக பகுதியில் நபர் ஒருவருக்கு எதிராக தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கனடிய பொலிஸார் குறித்த நபருக்கு எதிராக தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.

நீண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த நபருக்கு எதிராக இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் இந்த நபர் தொடர்பு பேணி உள்ளதாகவும் தீவிரவாத செயல்பாடுகளில் தொடர்பு பட்டதாகவும் சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபரினால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் தகவல்கள் வெளியிட வெளியிடப்படவில்லை.

ரொறன்ரோ பொலிஸார் கனடிய நீதி அமைச்சு, மாகாண தீவிரவாத தடுப்பு பிரிவு, அமெரிக்க புலனாய்வு பிரிவு என்பன கூட்டாக இணைந்து குறித்த நபருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எந்த தீவிரவாத அமைப்பிற்கு இந்த நபர் ஆதரவாக செயல்பட்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.