Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை அண்மிக்கின்றது.

Tamil Business Directory

இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக இதுவரை 7,835பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் 35பேர் உயிரிழந்ததோடு, 545பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை 96,244பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 33,409பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 55,000பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 1,828பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.