Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 279பேர் பாதிக்கப்பட்டதோடு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 31ஆயிரத்து 104பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 600பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஆறாயிரத்து 682பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 231பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13இலட்சத்து 97ஆயிரத்து 822பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.