Reading Time: < 1 minute

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 395பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 18ஆயிரத்து 561ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 966பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஆறாயிரத்து 489பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து மூவாயிரத்து 106பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, இரண்டு ஆயிரத்து 263பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.