Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்துள்ளது. இதன்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,169ஆக உயர்ந்துள்ளது.

Tamil Business Directory

அத்துடன், கடந்த 24 மணித்தியாலத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1,176பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 176பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 69,981ஆக உள்ளது.

மேலும், 31,946பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 34,042பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.