Reading Time: < 1 minute

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 236 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 221ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்த வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 976 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆறாயிரத்து 679 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவர்களில் 2 ஆயிரத்து 281 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், இந்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரையில், ஒரு இலட்சத்து மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீகளுக்கு திரும்பியுள்ளனர்.