Reading Time: < 1 minute

ஒன்டாரியோவின் ஹால்டிமண்ட் கவுண்டியில் காரொன்றும் SUV ரக வாகனமொன்றும் மோதிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என்று ஒன்டாரியோ மாகாணக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து செவ்வாய்க்கிழமை மதியம் 3.30, கேலிடோனியாவின் ஆர்கைல் வீதி தெற்குப் பகுதியில், ஹைவே 6 அருகே இடம்பெற்றுள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு, ஒன்டாரியோ மாகாணக் காவல்துறையின் ஹால்டிமண்ட் பிரிவினருடன், ஹால்டிமண்ட் கவுண்டி தீயணைப்பு மற்றும் அவசரசேவைகள் குழுவினரும் விரைந்து சென்றனர்.

வாகனத்தை ஓட்டிய நபர், கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

அந்த வாகனத்தில் பயணித்த மேலும் ஒருவரும் உயிருக்கு ஆபத்தான நிலைமையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SUV-ஐ செலுத்திய நபர், கடுமையான ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை எனக் கூறப்படும் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இது வரை உயிரிழந்த நபரின் அல்லது காயமடைந்தவர்களின் வயது, பாலினம் போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.