Reading Time: < 1 minute

டொரண்டோவிலுள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் காலணிகளுக்குள் மறைத்து கடத்தப்பட்ட 437,000 கனடா டாலர் மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.

Tamil Business Directory

கனடா எல்லை பாதுகாப்பு சேவைகள் நிறுவனம் (CBSA) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

மே 26 அன்று கயானாவிலிருந்து வந்த ஒரு பயணியின் பயணப் பொதியிலிருந்து இருந்து 3.5 கிலோகிராம் கொக்கைன் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த நபரை கனடிய எல்லை பாதுகாப்பு சேவை CBSA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். “பொருள்கள் கடத்தல் தடுப்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொக்கைன் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

“ஒரு நபரின் எல்லை மற்றும் குடிவரவு தொடர்பான தகவல் தனிப்பட்டது. எனவே, அந்த விவரங்களை பகிர முடியாது” என எல்லைப் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.