Reading Time: < 1 minute

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கான மக்கள் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்து.

Tamil Business Directory

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு; மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பியே பொலியேவ் தலைமையிலான கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு கூடுதல் மக்கள் ஆதரவு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பியே பொலியேவின் தலைமைக்கு 37 வீதமான மக்கள் ஆதரவு காணப்படுவதாகவும், பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான ஆளும் லிபரல் கட்சிக்கு 32 வீதமான ஆதரவு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு ஆரம்பத்துடன் ஒப்பீடு செய்யும் போது பியே பொலியேவின் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கான மக்கள் ஆதரவு நான்கு வீதத்தினால் அதிகரித்துள்ளது.

உடனடியாக கனடாவில் தேர்தல் நடத்தப்பட்டால் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

லிபரல் கட்சிக்கான ஆதரவில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.