Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவம் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பின்ச் அவன்யூ மற்றும் பிரைடல்டவுன் செர்க்கல் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டடத்தின் ஒன்பதாம் மாடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த தீ விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்த விபத்தில் மேலும் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.




