Reading Time: < 1 minute

இந்திய திரைப்பட நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மீது கனடா வாழ் தமிழர் ஒருவர் மோசடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

‘டிராபிக் ராமசாமி’ திரைப்படத்திற்காக தான் வழங்கிய இந்திய ரூபாய் 21 லட்சத்தை மோசடி செய்ததாகவும், பணத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மீள வழங்க மறுப்பதாகவும் கனடா வாழ் தமிழர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பணத்தை மீள வழங்குமாறு தான் விடுத்த கோரிக்கைகளை மறுப்பதுடன், அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த பணத்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடமிருந்து பெற்றுத் தருமாறு பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் கனடா வாழ் தமிழரால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், “எங்களை பார்த்தால் அரசாங்கமே மிரளும்” என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.