Reading Time: < 1 minute

கனடா Halifaxஇல் வால்மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்றில், இந்திய இளம்பெண்ணொருவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Tamil Business Directory

கனடாவின் Halifaxஇல் அமைந்துள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்றின் பேக்கரி பிரிவில், ஆள் நடக்கும் அளவிலான பெரிய ஓவன் ஒன்றிற்குள் ஒரு இளம்பெண் உயிரிழந்துகிடந்துள்ளார்.

சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் அந்த பல்பொருள் அங்காடிக்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சென்று பார்க்கும்போது, அந்த அவனுக்குள் (walking Oven) கிடந்த அந்த இளம்பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டிருக்கிறார்.

அந்த 19 வயது இளம்பெண்ணும், அவரது தாயாரும் இந்தியாவிலிருந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் கனடாவுக்கு வந்துள்ளதாக, சீக்கிய அமைப்பொன்றின் செயலரான பல்பீர் சிங் என்பவர் தெரிவித்துள்ளார்.

அந்த இளம்பெண் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து சமூக ஊடகங்களில் வதந்திகள் வேகமாக பரவிவருகின்றன.

இந்திய இளம்பெண் ஒருவர் ஓவனுக்குள் இறந்துகிடந்த விடயம் அப்பகுதி மக்கள், சீக்கியர்கள் மற்றும் இந்திய மக்களிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், பொலிசார் அந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.