Reading Time: < 1 minute

கனடா வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் “பயங்கரவாத சந்தேக நபர்கள் அல்லது உறுதிப்படுத்தப்பட்டவர்கள்” எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் காஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

அமெரிக்க காங்கிரஸ் House Oversight விசாரணைக் கூட்டத்தில், குடியரசுக் கட்சி எம்.பி. கெவின் கைலி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

தாம் கடமைகளை பொறுப்பேற்ற பிறகு, தெற்கு எல்லையில் இருந்து நுழையும் பயங்கரவாத சந்தேக நபர்கள் கணிசமாக குறைந்தாலும், வடக்கு எல்லையில் இருந்து நுழைவுகள் அதிகரித்துள்ளன,” என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு எல்லை மிகப்பெரியது என்பதால் அதை முழுமையாக மூட இயலாது எனவும், புதிய தீர்வுகளை உருவாக்கி கூடுதல் வளங்களை ஒதுக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

பட்டேல் கூறுகையில், இவர்கள் சீனா, ரஷ்யா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஜூலை மாதம் வரை 259 பயங்கரவாத தொடர்புடைய நபர்கள் கனடா நில எல்லை வழியாக நுழைய முயன்றுள்ளனர்.