Reading Time: < 1 minute

கனடாவின் மிசிசாகாவிலுள்ள ஒரு பாடசாலை ஆசிரியர், நான்கு மாணவர்களை தாக்கி, ஒரு அறையில் கட்டாயமாக அடைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

அட்வாடர் அவென்யூ மற்றும் காவ்த்ரா சாலை பகுதியில் உள்ள பள்ளியில் 2024–2025 கல்வியாண்டில் இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது.

அந்த ஆசிரியர் நான்கு மாணவர்களை ஒரு அறைக்கு அழைத்து சென்று, அவர்கள் வெளியேற முடியாத வகையில் தடுத்து வைத்திருந்தார் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த விசாரணையின் அடிப்படையில், 36 வயதான டேவிட் ஸைபல்ஸ்கி (David Szybalski) என்ற ஆசிரியர் மீது நான்கு தாக்குதல் குற்றச்சாட்டுகள் மற்றும் நான்கு கட்டாய அடைப்பு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர் சிறையில் வைக்கப்படாமல் சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் நாட்களில் பிராம்ப்டனில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார்.

குறித்த ஆசிரியர் தற்போது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் தன்மை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக்கூடும் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.