Reading Time: < 1 minute

பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரின் கனடாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி, இயற்கை வளங்கள், தொழிலாளர் நலன் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

Tamil Business Directory

வான்கூவர் நகரில் நடைபெற்ற இந்த உயர்மட்டச் சந்திப்பில், பிலிப்பைன்ஸ் அதிபரை கனடா பிரதமர் மார்க் கார்னி வரவேற்றார்.

கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டுத் தலைவர் ஒருவர் கனடாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

இச்சந்திப்பின் போது பேசிய பிரதமர் மார்க் கார்னி, “கனடாவின் பிலிப்பைன்ஸ் வம்சாவளி மக்கள், நாட்டின் இதயப்பகுதியாக விளங்குகிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த மூலோபாயக் கூட்டாண்மை மூலம் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய கனிம வளங்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் பெரும் பயனடைய முடியும்” எனக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் மணிலா நகருக்கு மேற்கொள்ளவிருக்கும் தனது உத்தியோகபூர்வ பயணத்திற்கு முன்னதாக, இந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய விரும்புவதாக பிரதமர் மார்க் கார்னி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.