Reading Time: < 1 minute

கனடாவில் சுமார் 400 கிலோ கிராம் எடையுடைய தங்கக் கொள்ளையுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

ஓராண்டுக்கு முன்னதாக ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் தங்கம் மற்றும் அமெரிக்க டொலர்கள் களவாடப்படடிருந்தன.

விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும் பணம் அடங்கிய பெட்டி களஞ்சியச்சாலையில் வைக்கப்பட்டதன் பின்னர் களவாடப்பட்டிருந்தது.

தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தின் மொத்தப் பெறுமதி சுமார் 21.1 மில்லியன் டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய கைதுகள் மற்றும் ஏனைய விபரங்களை விசாரணையாளர்கள் வெளியிட உள்ளனர்.

பீல் பிராந்திய வலயப் பொலிஸார் இந்த ஆரம்ப தகவல்களை வெளியிட்டுள்ளனர்.