Reading Time: < 1 minute

கனடாவில் மிஸ்ஸிசாகா பகுதியில் வீதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

ஐந்து வாகனங்களில் இவ்வாறு சிக்கியிருந்தவவர்களை மீட்பு பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

410 மற்றும் 401 ஆகிய இலக்க அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்த வாகனங்கள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வாகனங்களை விட்டு வெளியேற முடியாது இருந்தவர்களை மீட்பு பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு தீயணைப்பு படையினர் உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் சில பகுதிகளில கடுமையான மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.