Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றில் நடமாடும் வீடு ஒன்று வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

97ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த அபூர்வமான சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக சில மணித்தியாலங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பெரிய நடமாடும் வீடு (மூவிங்க் ஹோம்), அதை எடுத்துசெல்லும் லாரியில் இருந்து வழுக்கி விழுந்துள்ளது.

இந்த சம்பவம், காலை 8 மணியளவில் கெலோவ்னா சர்வதேச விமான நிலையம் அருகே ஹைவே 97-இன் தெற்குப் போக்குவரத்து பாதையில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசித்திரமான தடையைப் பற்றிய சமூக ஊடகப் பதிவுகள் வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் வியப்பும் நகைச்சுவையும் கலந்த கருத்துகளை பகிர்ந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.