Reading Time: < 1 minute

கனடாவில் டொரன்டோ நகரில் வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபரை போலீசார தேடி வருகின்றனர்.

Tamil Business Directory

குறித்த நபர் வீடுகளுக்குள் புகுந்து தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது முதல் சம்பவம் ஏப்ரல் 30ஆம் திகதி, எக்லிங்டன் அவென்யூ மேற்கு பகுதியில் உள்ள பாதர்ஸ்ட் ஸ்ட்ரீட் மற்றும் ஷால்மர் புளூவர்ட் அருகிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

அங்கு நுழைந்த நபர் அஞ்சல் மூட்டைகளைத் திருடிய பின்னர் தப்பியோடியதாக போலீசார் தெரிவித்தனர்.

இரண்டாவது சம்பவம் ஜூன் 10ஆம் திகதி, ஒரே சந்தேகநபர் எகடமி வீதி Academy Road மற்றும் கெரி ட்ரைவ் Gary Drive அருகே நிறுத்தப்பட்ட வெள்ளை நிற லேண்ட்ரோவர் Land Rover Evoque வாகனத்திலிருந்து வெளியேறி வீடொன்றில் நுழைந்து, ஒரு தொகை நகைகளை எடுத்துச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூன்றாவது சம்பவம் அதனைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, யோர்க் மில்ஸ் வீதி York Mills Road மற்றும் பென்சயிட் ட்ரைவ் Fenside Drive பகுதியில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் நுழைந்திருந்தார்.

ஆனால் வீட்டின் உரிமையாளர் விரைவில் வீட்டிற்கு திரும்பியதால், அந்த சந்தேகநபர் எதையும் எடுக்காமல் இடத்திலிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர் 47 முதல் 52 வரை வயதுடையவர் எனவும், உயரம்: 5 அடி 11 அங்குலத்திலிருந்து 6 அடி வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. போலீசார் இந்த நபரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.