Reading Time: < 1 minute

கனடாவில் வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

Tamil Business Directory

இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை 17 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் இவ்வாறு வாகனை கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

காப்புறுதி மோசடி தவிர்ப்பு பிரிவினர் இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எல்லை பாதுகாப்பு ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டமை, போலீசாரின் விசாரணைகள், அரசாங்கத்தின் நடவடிக்கை மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போன்ற காரணிகளினால் இவ்வாறு வாகன கொள்ளை சம்பவங்கள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு முயற்சியின் மூலம் வாகன கொள்ளை சம்பவங்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் போலீசார் வாகன கொள்ளை தடுப்பு தொடர்பிலான விசேட போலீஸ் படையணிகளை நிறுவி நடவடிக்கை எடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.