Reading Time: < 1 minute

கனடாவில் வயோதிப பெண் ஒருவரை குத்திக் கொன்றதாக 14 வயதான சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Tamil Business Directory

பிக்கரிங்க் நகரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கொடூரமான கொலையில் 80 வயதுக்கு மேற்பட்ட வயோதிப பெண் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 14 வயது சிறுவன் மீது முதல் நிலை கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு இளைஞர் குற்றவியல் நீதிக்கான சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் சிறாராக இருப்பதால் அவரை பொதுவெளியில் அடையாளம் காண அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சம்பவத்தையடுத்து, நகராட்சி பொதுமக்களுக்கு வீட்டில் தங்குமாறு உத்தரவு வழங்கியது.

அத்துடன், பொதுத் தளங்கள் மூடப்பட்டன, வகுப்புகள் மற்றும் நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டது.

இந்த சம்பவம் பிக்கரிங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியின் நடவடிக்கைகள், பின்னணி மற்றும் உறவுமுறைகள் குறித்து பொலிசார் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.