Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் ரயில் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
கனடிய ரயில் ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து இந்த எச்சரிக்கை விடுத்துள்ளன.
பணி ஒப்பந்தங்கள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்கைளினால் இவ்வாறு தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பணியாளர்களினதும், பொதுமக்களினதும் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த இரண்டு தொழிற்சங்கங்களிலும் சுமார் 9300 பணியாளர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமூகமான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.




