Reading Time: < 1 minute

கனடாவில் தந்தை ஒருவர் தனது பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக தனது உயிரை பணயம் வைத்து செயல்பட்ட சம்பவம் என்று பதிவாகியுள்ளது.

Tamil Business Directory

ஸ்ப்ரிங்பீல்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீப்பற்றி எரிந்த வீட்டுக்குள் சிக்கியிருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளை குறித்த நபர் காப்பாற்றியுள்ளார்.

திரைப்படங்களில் வரும் ஹீரோக்களை போன்று எரியும் வீட்டுக்குள் திடீரென புகுந்து தனது இரண்டு பிள்ளைகளையும் பாதுகாப்பாக மீட்டு வெளியே வந்துள்ளார்.

ஒன்றாரியோவின் ஸ்ப்ரிங் ஃபீல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு வீர தீர செயலில் ஈடுபட்டுள்ளார்.

வென் பைபி என்ற நபரே இவ்வாறு தனது இரண்டு பிள்ளைகளையும் தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளார்.

இரண்டரை வயது மற்றும் ஒரு வயது நிரம்பாத இரண்டு குழந்தைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

எவ்வாறெனினும் இந்த தீ விபத்து காரணமாக குறித்த நபருக்கும் குழந்தைகளுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

தீ விபத்துக்கான காரணங்கள் எதுவும் கண்டறிய கண்டறியப்படவில்லை.