Reading Time: < 1 minute

கனடாவில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவ சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

கனடாவின் நோர்த் யோர்க் பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் சந்தேக நபர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் இருவர் ஆண்கள் எனவும் ஒருவர் பெண் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யோக் மில்ஸ் வீதியின் தென்பகுதியில் அமைந்துள்ள டன் மில்ஸ் கட்டிடத் தொகுதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான முரண்பாட்டு நிலைமையினால் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.