Reading Time: < 1 minute

கனடா ரொறன்ரோ அருகே தெருவின் தடுப்புசுவரில் மோதி டெஸ்லா எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து எரிந்ததில் காரில் பயணித்த 4 இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்தியாவில் குஜராத்தை சேர்ந்த 30 வயதான கேட்டா கோஹில், 26 வயதான நில் கோஹில் ஆகியோர் மேலும் 2 நபர்களுடன் டெஸ்லா எலக்ட்ரிக் காரில் பயணம் செய்துள்ளனர்.

அப்போது டிவைடரில் டெஸ்லா கார் மோதியுள்ளது. அதனால் டெஸ்லா காரின் பேட்டரி தீப்பிடித்தது. இதனால் சம்பவ இடத்திலேயே 4 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் கடுமையான காயங்களுடன் உயிர் பிழைத்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக காரின் கண்ணாடிகளை உடைக்க சிலர் முயன்றதாக இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.