Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் காம்ப்லூஸ் பகுதியில் காணாமல் போய், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையாளி ஒரு ஆண்டுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

இந்தப் பெண்ணை அவரது மகன் படுகொலை செய்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில் குறித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

57 வயதான ஜோ-அன்னே டோனோவன் என்ற பெண் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காணாமல் போயிருந்தார். ஒரு வாரத்தின் பின்னர் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த பெண்ணின் மரணம் தொடர்பில் மர்மம் நீடித்து வந்த நிலையில் கனடிய பொலிஸார் குறித்த சம்பவத்த தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுத்தனர்.

இதன் அடிப்படையில் குறித்த பெண்ணின் மகனான 35 வயது உடைய பிராண்டன் ஜெரமியோ டோனோவன் என்ற நபர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த நபரை பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதனால் மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.