Reading Time: < 1 minute

பிரபல நிறுவனம் ஒன்று, கனடாவில் தள்ளுபடி விலையில் மளிகைக்கடைகள் பலவற்றை திறக்க முடிவு செய்துள்ளது.

Tamil Business Directory

விலைவாசியால் உணவுப்பொருட்கள் வாங்க கஷ்டப்படும் கனேடியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இச்செய்தி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

கனடாவின் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான Loblaw, கனடாவின் பல பகுதிகளில் தள்ளுபடி விலையில் மளிகைக்கடைகள் பலவற்றை திறக்க முடிவு செய்துள்ளது.

No Name stores என அழைக்கப்படும் இந்த கடைகளில் முதல் மூன்று கடைகள், அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம், Windsor, St. Catharines மற்றும் Brockville ஆகிய இடங்களில் திறக்கப்பட உள்ளன.

இந்த மளிகைக்கடைகளில், 1,300 வகையான பொருட்கள் கிடைக்கும். இந்தக் கடைகள், காலை 10.00 மணி முதல், மாலை 7.00 மணி வரைதான் இயங்கும்.

அத்துடன், மற்ற கடைகளில் கிடைக்கும் பொருட்களைவிட, இங்கு கிடைக்கும் பொருட்கள், 20 சதவிகிதம் வரை தள்ளுபடியில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.