Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் மொன்றியால் புறநகர் பகுதியில் ஐந்து வயதான சிறுவன் ஒருவனை இரண்டு பெண்கள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த பெண்கள் குறித்த சிறுவனை கடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
65 மற்றும் 48 வயதான இரண்டு பெண்கள் குறித்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிறுவனை கனடாவில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு கடத்திச் செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் விசாரணைகள் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
14 வயதிற்கும் உட்பட்ட பிள்ளைகளை அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதி இன்றி அழைத்துச் செல்வது கடத்தல் குற்றமாகவே கருதப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.




