Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 14இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக 14இலட்சத்து 582பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 1,445பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 36ஆயிரத்து 182பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 637பேர் உயிரிழந்துள்ளனர்

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள எட்டாயிரத்து 963பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 231பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.