Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து இதுவரை, ஒரு இலட்சத்து 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு ஒரு இலட்சத்து 75ஆயிரத்து 805பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து ஒன்பதாயிரத்து 148பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 862பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் மூவாயிரத்து 194பேர் பாதிக்கப்பட்டதோடு, 36பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 23ஆயிரத்து 481பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 75ஆயிரத்து 805பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் 215பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.