Reading Time: < 1 minute

கனடாவில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

வாகனக் கடத்தல் மற்றும் ஆயுத கொள்ளைகளுடன் தொடர்புடைய கும்பல் ஒன்றை அதிகாரிகள் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

இந்தக் கும்பல் பிரம்டனில் இயங்கி வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பீல் பிராந்திய பொலிஸாரினால் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் பதின்ம வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசாரணைகள் மற்றும் கைதுகளைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.