Reading Time: < 1 minute

கனடாவில் ஒன்றாறியோ மாகாணத்தின் மிஸ்ஸிசாகா பகுதியில் மிக அரிய வகை கார் ஒன்று களவாடப்பட்டுள்ளது.

Tamil Business Directory

பிரபல கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஃபெராரி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 10 அரியவகை கார்களில் ஒன்று இவ்வாறு காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மிஸ்ஸிசாகாவை சேர்ந்த ஒரு தம்பதியினர் இவ்வாறு தமது கார் காணாமல் போய் உள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

தங்களது குடியிருப்பு தொகுதியின் வாகன தரிப்பிடத்தில் கடந்த வாரம் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றினர்.

தாங்கள் விடுமுறையில் சென்றிருந்தபோது துரதிஷ்டவசமாக இந்த கார் களவாடப்பட்டுள்ளது என குறித்த தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.

மிகவும் அரிய மாடல் கார் என்பதனால் இந்த கார் களவாடப்பட்டமை குறித்து தமது கணவர் மிகுந்த வேதனையில் இருப்பதாக வாகன உரிமையாளரின் மனைவி தெரிவிக்கின்றார்.

நான்கு நிமிட இடைவெளியில் வாகனத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக வாகன உரிமையாளரது மனைவி தெரிவிக்கின்றார்.