Reading Time: < 1 minute

கனடாவில் கத்தி முனையில் வாகனம் கடத்த முயற்சித்த இரண்டு பதின்ம வயதுடைய சிறுமியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

டுன்டாஸ் வீதி மற்றும் ஸ்கார்லெட் வீதி ஆகியனவற்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்தி முனையில் நபர் ஒருவரிடமிருந்து வாகனத்தை அபகரித்துச் செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது.

வாகன கொள்ளை முயற்சிக்காக பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

15 மற்றும் 16 வயதுடைய சிறுமியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு சிறுமியரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.