Reading Time: < 1 minute

கனடா ரொறன்ரோவில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

ரொறன்ரோவின் வெஸ்ட் டொன் லேன்ட்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு ஆண்கள் மோதிக்கொள்வதாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 20 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.