Reading Time: < 1 minute

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

கனடாவின் ஒஷாவாவின் ஜேன் மற்றும் கிளென்பொரெஸ்ட் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் டர்ஹம் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 30 வயதான ஆண் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

கொலைக் குற்றச்சாட்டு சுமத்த்தப்பட்ட நபர் கொலையுண்டவர்களுக்கு நன்கு அறிமுகமானவர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.