பிரித்தானியாவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, சுமார் 139 மில்லியன் பவுண்டுகள் சந்தை மதிப்புடைய 12 தொன் எடையுள்ள பெருமளவிலான கஞ்சா போதைப்பொருளைப் பாதுகாப்புப் பிரிவினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
கனடாவிலிருந்து பிரித்தானியாவுக்குக் கடத்தி வரப்பட்ட இந்த மாபெரும் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக, தென் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடா எல்லைச் சேவைகள் முகவரகம் வழங்கிய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், பிரித்தானியாவை நோக்கி வந்த ஒரு போதைப்பொருள் கப்பல் வழிமறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கடத்தலின் பின்னணியில் இருந்த உள்நாட்டுச் சூத்திரதாரிகளைக் கண்டறியும் நோக்கில் தென்மேற்கு பிராந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவு தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.