Reading Time: < 1 minute

சட்டவிரோதமான முறையில் கனடிய எல்லை பகுதியிலிருந்து அமெரிக்காவிற்குள் பிரவேசித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

அமெரிக்க எல்லை பாதுகாப்பு படையினர் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

நயகரா பிராந்தியத்திலிருந்து குறித்த பின் கால்நடையாக சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச ரயில் பாலத்தின் ஊடாக பெண்ணுருவர் நடந்து செல்வதை அவதானித்த அமெரிக்க எல்லை பாதுகாப்பு பிரிவினர் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

குறித்த பாலம் அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் ரயில் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத ஆட்டடத்தில் நடவடிக்கையின் ஓர் அங்கமாக இந்த சம்பவம் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் பிரவேசித்த போது அவரை அழைத்துச் செல்வதற்காக வாகனத்தில் வந்து காத்திருந்த நபர் ஒருவரையும் அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் சீனாவை சேர்ந்தவர் என்பது விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.