Reading Time: < 1 minute

கனடாவில் குடியேறிகளின் பிரவேசத்தை ஒழுங்முறைக்கு உட்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கனடிய அரசாங்கத்தினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் கடுமையான வீட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள பின்னயியில், இவ்வாறு குடியேறிகள் எண்ணிக்கையை வரையறுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வீடமைப்பு அமைச்சர் சீன் ப்றேசர் மற்றும் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆண்டு தோறும் அரசாங்கம் வீட்டுப் பிரச்சினை குறித்த சவால்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குடிவரவு தொடர்பிலான ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஐந்து லட்சம் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்க கனடிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.

எவ்வாறெனினும் வீடமைப்பு பிரச்சினைகளினால் கனடிய மக்கள் எதிர்நோக்கி வரும் கடும் சவால் நிலைமைகளினால் இவ்வாறு குடியேறிகளுக்கு அனுமதி வழங்குவது மீளாய்வு செய்யப்படக்கூடும் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.