Reading Time: < 1 minute

கனடாவின் றொரன்டோ நகரின் மேயர் பதவிக்காக 18 வயதான மெஹிர் ஸ்ட்ராஸ் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

Tamil Business Directory

தனது 18ம் வயது பிறந்த தினத்திற்கான பரிசாக, தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அவர் பெற்றோரிடம் கோரியுள்ளார்.

ஸ்ட்ரோஸ் தரம் 12ல் கல்வி கற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் றொரன்டோ நகர மேயர் பதவிக்காக 50 வேட்பாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தனது பார்வையில் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து குரல் கொடுக்க உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வீடற்றவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றியீட்ட முடியாவிட்டால் உயர்கல்வியைத் தொடர உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் தனது முதலாவது முன்னுரிமை நகரின் மேயர் ஆசனத்தில் அமர்வது என ஸ்ட்ரோஸ் தெரிவித்துள்ளார்.