Reading Time: < 1 minute

கனடாவின் நயகரா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

நயகராவின் கென் கதரீன்ஸ் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மற்றுமொரு பெண் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே குறித்த ஆண் உயிரிந்துவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனவும், இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் எனவும் இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயுதம் தாங்கிய குறித்த சந்தேக நபர் ஆபத்தானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தகவல்கள் இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.