Reading Time: < 1 minute

றொரன்டோவில் கத்தி முனையில் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த இளைஞர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Tamil Business Directory

றொரன்டோவின் வெஸ்டன் பகுதியின் தொடர்மாடி கட்டடமொன்றில் இடம்பெற்றுள்ளது.

இதேவிதமான மற்றுமொரு சம்பவமும் பதிவாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லிப்டில் சென்ற பெண் ஒருவரை கத்தி முனையில் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளதாகவும் குறித்த பெண் தப்பித்து சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதே கட்டடத்தின் சலவை அறையில் இளைஞர் ஒருவர் பெண் ஒருவரை கத்தி முனையில் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.

ஐந்து அடி ஏழு அங்குலம் உயரமுடைய கட்டுமஸ்தான இளைஞர் ஒருவர் இந்த சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.