Reading Time: < 1 minute
Tamil Business Directory
ஒரு வருடமாக காணாமல் போன ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க வின்னிபெக் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோருகின்றனர்.
சிந்தியா பாரிசியன் என்ற பெண்னே இவ்வாறு காணமல் போயுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு பெப்ரவரி 17ஆம் திகதி வின்னிபெக்கில் 845 லீலா அவென்யூவில் உள்ள ஹோம் டிப்போவில் அவர் இறுதியாக காணப்பட்டுள்ளார்.
பாரிசியன், ஐந்து அடி மூன்று அங்குல உயரம் கொண்டவரெனவும், சற்று பருமனான தோற்றம், பழுப்பு நிற முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவரெனவும் பொலிஸார் விபரித்துள்ளர்.
இவர் காணாமல் போனது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறனர். இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள், வின்னிபெக் பொலிஸ் சேவை காணாமல்போனோர் பிரிவுக்கு உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.




