Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் தொடர் இருமல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நோயாளர் எண்ணிக்கை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இவ்வாறு கூடுதல் எண்ணிக்கையில் தொடர் இருமல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
ஒன்றாரியோ பொது சுகாதார அலுவலகம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்தத் தொடர் இருமல் நோய் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடியது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நோய் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் பாதிப்புகளை வரையறுத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.




