Reading Time: < 1 minute

ஒன்றாரியோவில் மான் வேட்டையாடிய இரண்டு பேருக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கடந்த ஒக்ரோபர் மாதம் தவறுதலாக காளை கடமான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மான் வேட்டையாடுவதற்கு இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும் காளை கடமானை வேட்டையாட அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தன்டர்பே பகுதியைச் சேர்ந்த ஜோன் பொலிசோக் என்பவருக்கும், ஜொஸ்வா ஸ்டீவன்சன் என்பவருக்கும் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் வேட்டையாடிய மற்றும் சட்டவிரோதமான முறையில் வேட்டையாடிய விலங்கினை வைத்திருத்தல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த இருவருக்கும் சுமார் பத்தாயிரம் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.