Reading Time: < 1 minute

2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் கனடா ஒரு படி முன்னேறியுள்ளது.

Tamil Business Directory

Henley Passport Index என்னும் அமைப்பு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது.

ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

அவ்வகையில், 2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், சிங்கப்பூர் முதலிடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளது.

சிங்கப்பூர், பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 192 நாடுகளுக்கு பயணிக்கலாம்.

இரண்டாம் இடத்தை மூன்று நாடுகள் பகிர்ந்துகொள்கின்றன. அவை, ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்.

இந்நிலையில், பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்த கனடா, ஒரு படி முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கனேடிய பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 182 நாடுகளுக்கு பயணிக்கலாம்.

பட்டியலில், பிரித்தானியா 6ஆவது இடத்திலும் அமெரிக்கா 10ஆவது இடத்திலும் உள்ளன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.