Reading Time: < 1 minute

இவ்வாண்டு ஆகஸ்ட் முதல் 25 நாட்களில், 143,622 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

Tamil Business Directory

சுற்றுலா வளர்ச்சி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இம்மாதம் முதல் 25 நாட்களில் வந்தவர்களில் 19.5% பேர் என்றும், அவர்களில், 27,999 பேர் இந்தியாவில் இருந்து வருகை தந்துளள்னர்.

மேலும், இங்கிலாந்தில் இருந்து 15,918 சுற்றுலாப் பயணிகளும், சீனாவில் இருந்து 10,068 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 9,162 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வந்துள்ளனர்.

அதற்கமைய, நாட்டிற்கு இதுவரை வருகை தந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,341,681 ஆகும்.