Reading Time: < 1 minute

அத்தியாவசிய தேவை ஏற்பட்டாலன்றி அமெரிக்காவுக்கு பயணிக்கவேண்டாம் என கனேடிய ஆசிரியர் கூட்டமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.

Tamil Business Directory

குறிப்பாக, மூன்றாம் பாலினத்தவர் என அறியப்படுவோர் மற்றும் தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிரானதாக கருதப்படும் ஆய்வுகளில் பங்கேற்போருக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம் உருவாக்கியுள்ள அரசியல் சூழல், மற்றும் சமீப காலமாக எல்லை தாண்டி அமெரிக்கா செல்லும் கனேடியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, கனேடிய பல்கலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு நேற்று அந்த பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.