Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அமெரிக்க குடிமக்கள் தவிர அனைத்து வெளிநாட்டினருக்குமான தனது எல்லைகளை மூட கனடா தீர்மானித்துள்ளது.

Tamil Business Directory

மனைவி சோபியாவுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட பின்னர் சுய தனிமைப்படுத்தலில் உள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது வீட்டிற்கு வெளியே இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், ‘கனேடியக் குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் அல்லாதவர்கள் கனடாவுக்குள் நுழையமுடியாது. எல்லைத் தடையில் இருந்து அமெரிக்கர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மக்களை வீட்டில் தங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மார்ச் 18ஆம் திகதி முதல் நான்கு கனேடிய விமான நிலையங்களுக்கு சர்வதேச விமானங்களைக் கட்டுப்படுத்தவுள்ளோம் எனினும், உள்நாட்டு விமானங்களின் சேவைகள் பாதிக்கப்படாது என்று கூறினார்.