ஓ கனடா – கனடிய தேசிய கீதம் – Canadian National Anthem in Tamil

Reading Time: < 1 minute

ஓ கனடா” கனடாவின் தேசிய கீதம் ஆகும். இந்த கீதத்தின் முதல் ஆக்கம் பிரெஞ்சு மொழியில் சர் அடொல்ப் பேஸில் ரூத்தீயே (Sir Adolphe Basile Routhier) என்பவரால் எழுதப்பட்டது. தற்போதைய ஆங்கில மொழியாக்கம் ரொபேற் ஸ்ரான்லி வியர் ( Robert Stanley Weir) என்பவரால் 1908ம் ஆண்டு எழுதப்பட்டது. தமிழ் மொழி ஆக்கம் கவிஞர் கந்தவனம் என்பவரால் எழுதப்பட்டது.

Tamil Business Directory

தமிழ் மொழியாக்கம்

ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ!

உந்தன் மைந்தர்கள்
உண்மை தேச பக்தர்கள்!

நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய்
நீ எழல் கண்டு (உ)வப்போம்!

எங்கும் உள்ள நாம், ஓ கனடா
நின்னைப் போற்றி அணிவகுத்தோம்!

எம்நிலப் புகழை, சுதந்திரத்தை
என்றும் இறைவன் காத்திடுக!

ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி

அணிவகுத்தோம்!
ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி

அணிவகுத்தோம்!

ஆங்கில மொழியாக்கம்

O Canada! Our home and native land!
True patriot love in all thy sons command.
With glowing hearts we see thee rise,
The True North strong and free!
From far and wide, O Canada,
We stand on guard for thee.
God keep our land glorious and free!
O Canada, we stand on guard for thee.
O Canada, we stand on guard for thee.

பிரெஞ்சு மொழியாக்கம்

Ô Canada ! Terre de nos aïeux,
Ton front est ceint de fleurons glorieux !
Car ton bras sait porter l’épée,
Il sait porter la croix;
Ton histoire est une épopée
Des plus brillants exploits.
Et ta valeur de foi trempée
Protégera nos foyers et nos droits;
Protégera nos foyers et nos droits.