ஒட்டாவா மற்றும் பீஜிங்கிற்கு இடையிலான அரசியல் பதற்றநிலைகளுக்கு மத்தியில், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், செனட்சபை உறுப்பினர்களும் சீனாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கமைய, செனட் உறுப்பினர்களான விக்டர் ஓஹ், ஜோசப் டே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மைக்கல் கூப்பர், கெங் டான், மஜிட் ஜவ்ஹாரி, சந்திர ஆர்யா ஆகியோர் நாளை (சனிக்கிழமை) சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். ஹுவாவி அதிகாரி கனடாவில் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மூன்று கனடியர்கள் சீனாவில்Read More →

பிரம்டன் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடம் ஒன்றின் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஆண் ஒருவர் படுகாயமடைந்ததாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கென்வூவ் பவுல்வர்ட் மற்றும் ஃபின்ச் அவென்யூ பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) காலை ஏழு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது 21 வயதான இளைஞர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரதுRead More →

ஸ்காபரோவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். கொமாண்டர் வூல்வர்டு பகுதியில் உள்ள உள்ள “எஸ்டீ லாடர்” எனப்படும் தொழிற்சாலையின் வளாகத்திலேயே நேற்று (வியாழக்கிழமை) காலை 4 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்ததாகவும், எனினும் பலத்த முயற்சியின் பின்னர் தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டினுள்Read More →

ஸ்கார்பாரோவில் ஷெப்பர்ட் & கிங்ஸ்டன் அருகே சூட்டு சம்பவம் ஒன்று இன்று வியாழன் (Jan 03, 2019) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. Shallice Crt & Durness Ave அருகே போலீசாருக்கு கிடைத்த அவசர அழைப்பின் பேரில் (911 Call) அங்கு சென்ற போலீசார் Shallice CRT வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் மார்புப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் உயிருக்கு ஆபத்தானநிலையில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க ஆணொருவரைRead More →

கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் ரொறன்ரோ பொலிஸாரால் 1,116 பேரும் யோர்க் பிராந்திய பொலிஸாரால் 1,650 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ரொறன்ரோவில் 74 பேர் பேர் போதை மருந்து பாவனை தொடர்பிலும் 1,042 பேர் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்தியவர்களும் ஆவர். குறிப்பாக இதில் 170 பேர் கடந்த ஆண்டின் நவம்பர் தொடக்கம் மற்றும் டிசம்பர் மாதத்தின் 31Read More →

சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வரும் ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி’யின் மாயக்குதிரை சிறுகதைக்கு ஆனந்தவிகடனின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது கிடைத்துள்ளது. இனத்தின் வலியை பதிவு செய்த ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி ‘அரசியல் ஆழமிக்க படைப்புகளில் ஒரு துளியும் கலையம்சம் குன்றிவிடாமல் எழுதுவது தமிழ்நதியின் பெரும்பலம். தமிழ்நதியின் வழக்கமான மொழிநடை இத்தொகுப்புக் கதைகளில் இன்னும் செழுமையேறி, கதை பயணிக்கும் தளங்களுக்கே வாசகர்களைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது. தவிர்க்கRead More →

இலங்கைக்கு செல்லும் தமிழ் கனேடியர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்படக் கூடிய ஆபத்து உள்ளது என்று, தமது பிரஜைகளுக்கு கனேடிய அரசாங்கம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.   கனேடியர்கள் எந்தநேரத்திலும் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும். யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் படையினரின் பிரசன்னம் உள்ளது. இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அங்கு செல்லும் தமிழ் வம்சாவளியினர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்படலாம். அத்துடன் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினை இன்னும்Read More →

விதிமுறைகளுக்கு மீறி வாகனத்தைச் செலுத்திச் செல்வோருக்கு எதிரான கடுமையான புதிய நடைமுறைகள் ரொறன்ரோவிலும் புதுவருடம் முதல் நடப்பிற்கு வருகிறது. ஒன்ராறியோ மாகாண அரசு விதிமுறைகளுக்கு முரணாக வாகனத்தைச் செலுத்திச் செல்வோருக்கு எதிரான கடுமையான புதிய நடைமுறைகளை நேரில் இருந்து நடப்புக்கு கொண்டுவந்துள்ளது. இந்த நிலையிலேயே எந்த விதமான தாமதமும் இன்றி ரொறன்ரோவிலும் குறித்த விதிமுறைகள் இன்றிலிருந்து நடைமுறைக்கு வருவதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் அடிப்படையில், தவறுRead More →

துப்பாக்கி வன்முறையில் கடந்த ஆண்டு மோசமான சாதனை படைத்திருந்த ரொறன்ரோவில் புத்தாண்டின் முதல் நாளிலேயே துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதேசவாசிகளின் தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் நினைவிழந்து கிடந்த நபருக்கு முதலுதவி வழங்கி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்ட நபருக்கு எவ்வித உயிராபத்தும் இல்லை எனRead More →

கனேடிய மத்திய அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கார்பன் வரி விதிப்பிற்கு, கொன்சவேற்றிவ் கட்சி தலைவர் அன்ட்ரூ ஷீர் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசாங்கத்தின் புதிய கார்பன் வரி புத்தாண்டின் முதல் நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வந்தது. இந்நிலையில், இது தொடர்பில் நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், இந்த புதிய வரியானது ஏற்கனவே போராடிவரும் கனேடியர்களை மேலும் இன்னல்களுக்கு உட்படுத்தும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.Read More →